IATF TRAINING PORTAL

சனியின் அதிசார பெயர்ச்சி, முடிந்த பின், 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன் நடக்கும்?

அதிசார பெயர்ச்சி என்பது நம் வீட்டில் இருந்து, மற்றொரு வீட்டிற்கு, வாடகைக்கு போவதற்கு முன், அந்த வீட்டை சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் தன் வீட்டிற்கு வருவது போன்ற அமைப்பு.


கடந்த ஏப்ரல் மாதம் 29.4.2022 தேதியிலிருந்து 12. 7. 2022 வரை கிட்டத்தட்ட 75 நாட்கள் சனி, அதிசாரமாக கும்பத்திற்கு பெயர்ச்சியாகி இருந்தார்.

இன்னும் மூன்று நாட்களில், சனி பகவான், தன்னுடைய வீடான மகரத்தில் மறுபடியும்  ஆட்சி பெறுவார்.


இந்த 75 நாட்களில் அஷ்டம சனியை அனுபவித்துக் கொண்டிருக்கும், மிதுன ராசிக்காரர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருப்பர். இனியும் கவனம் தேவை.


தனுசு ராசிக்காரர்களுக்கும், ஒரு தரமான பலன் நடந்திருக்கும்.


கடந்த 75 நாட்களாக அர்தாஷ்டம சனியை அனுபவித்துக்கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் மறுபடியும் ஆரம்பமாகிறது. இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள், கொஞ்சம் விழிப்புடன் இருப்பது நல்லது.


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல், தொழிலில் திடீரென தடையை அனுபவித்து வந்த, ரிஷப ராசிக்காரர்களும்  நல்ல பலனை அடையப் போகிறார்கள்.


மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


இந்த 75 நாட்களில் கடக ராசிக்கு கண்டகச் சனி முடிந்து, அஷ்டம சனி ஆரம்பிப்பதற்கான அறிகுறியை காட்டு, காட்டு எனக் காட்டி சென்றிருக்கும். கடக ராசிக்காரர்கள் இனிவரும் காலகட்டங்களில் மிக கவனமுடன் இருப்பது நல்லது.


சிம்ம ராசியை பொறுத்தவரை, சீரான அமைப்பு உண்டு.


கன்னி ராசி இனி வரும் கால கட்டங்களில் கலக்கப் போகிறது.


துலா ராசிக்கு துயரங்கள் தொலைந்து ஓடும்.


தனுசு, இனி தினுசு, தினுசாக மின்ன போகிறது.


மகரம், தகரம் போல் நெளிந்த வாழ்வில்  ஓரளவு வளம் உண்டு.


கும்பத்திற்கு டம்பம் கூடாது. இல்லை என்றால் கம்பத்தில் கட்டி வைத்து, அடி விழும் நிலை ஏற்படும்.


மீனம், ஓணம் பண்டிகை போல் இனிவரும் காலங்கள் இருக்காது. ஏழரை ஆரம்பமாகப் போகிறது.


வாழ்க்கையை கோணம் இல்லாமல் அமைத்து வைத்துக்கொள்வது, உங்கள் கையில் உள்ளது.


ஓம் நமசிவாய. ஶ்ரீராம ஜெயம்.

நன்றி - ஜோதிடர் அனந்த கிருஷ்ணன்


Keep in touch & keep following.


Thanks,


Devarajan NR,
Chairman – JBEGlobal.com Job Portal & IATFTrainingPortal.com (Since 2013) Past – Delphi TVS | Rane | Brakes India | Iris Mfg. (Shriram Group) | Hinduja Foundries | IRS (IRQS) | 9362439124 | devarajan.jupiter@gmail.com