IATF TRAINING PORTAL

மகான் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சித்தர் காளிமுத்து சாமிகள் வாழ்க்கை குறிப்பு

மகான் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சித்தர் காளிமுத்து சாமிகள் 


ஓம் நமசிவாய ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் அழுக்குமூட்டை சித்தர் சுவாமிகள் போற்றி ஓம் காளிமுத்து சுவாமிகள் போற்றி ஓம் பாம்பாட்டி சித்தர் சுவாமிகள் போற்றி 


நல்லதே நடக்கும் நம்பிக்கை இருந்தால்

சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீதும் இறை அவதாரமாக பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைக்க வேண்டும் 


எத்தனையோ அவதாரபுருஷர்கள் இருக்கிறார்களே நான் யார் மீது நம்பிக்கை வைப்பது என்று நீங்கள் அடுத்து கேள்வி கேட்கலாம் இதற்கு மிகவும் சரியான விடை பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி என்ற மூட்டை சாமிகள் மீது துளி அளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் அவரை நம்பி தங்களை ஒப்படைத்துக் கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 


அவர்களது அனைத்து ஜென்மத்து பாவங்களையும் தோஷங்களையும் மூட்டை சாமிகள் நீக்கி அருள் புரிந்துள்ளார் என்பது பலருக்கும் நம்ப முடியாத உண்மையாகும்

நம்மில் பலரும் எதையும் எளிதில் நம்பிவிட மாட்டோம் அப்படி நம்பாமல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அருளை தவறவிட்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இவர் சாதாரண மகான் நல்ல சரித்திரங்கள் பல படைத்து விட்டு சென்றிருக்கும் யுக புருஷர் கடவுளின் அவதாரம் ஆவார் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழனி சுற்றுப்பகுதியில் நடமாடிய மகத்தான இந்த மகான் மானுட ரூபத்தில் வாழ்ந்த கடவுள் என இன்றும் வழிபடுகிறார்கள்


அவர் வாழ்ந்த விதம் பக்தர்களிடம் பழகிய விதம் பக்தர்களின் கர்மவினைகளைத் தீர்த்த விதம் அனைத்தும் வித்தியாசமானவை அத்தனையும் செய்துவிட்டு அவர் சாதாரணமாகவே இருந்தார் அதனால்தான் என்னவோ நிறைய பேர் அவரை நம்ப மறுத்தனர் அவரது உருவ அமைப்பும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை சராசரி உயரம் பரட்டைத்தலை அதைச்சுற்றி முண்டாசு அதோடு மழிக்கப்படாத முகம் பச்சை நிற சட்டை அணிந்து உலாவிய அவரை முதல்முறையாக பார்த்தவர்கள்இவரை போய் எப்படி வணங்குவது என்றே மலைத்தனர் குழம்பியும் மருகியும் நின்றனர் ஆனால் மூட்டை சாமிகளுக்கு தன்னை நாடி வந்த ஒவ்வொருவரின் அனைத்து ஜென்ம பிறப்பும் இறப்பும் பாவ புண்ணியங்களும் விடாது துரத்தும் வினைகளும் தெளிவாக தெரிந்தன அந்த வினைகளை விரட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தார்


சிலரிடம் மண்வெட்டி கொடுத்து மண் தோண்ட சொல்வார் சிலரிடம் பள்ளமாக இருக்கும் குழிகளை மூடச் சொல்வார் சிலரிடம் கற்களை எல்லாம் பொறுக்கி வந்து ஓரிடத்தில் குவித்து போடச் சொல்வார் சிலரிடம் சாக்கடைத் தண்ணீரை சரி செய்ய சொல்வார் பெரிய பாறாங்கல்லை கொஞ்ச தூரத்துக்கு புரட்டி போடச் சொல்வார் சிலரிடம் வடக்கே போ தெற்கே போ என்பார் சிலரிடம் கிழக்கில் போய் மேற்கே வா என்பார்


ஒரு குறிப்பிட்ட மரத்தை சுற்றி வா என்பார் சிலருக்கு அடி விழும் சிலரை ரத்தம் வரும் வரை கூட அடித்ததுண்டு சிலருக்கு ஏகவசனத்தில் திட்டு விழும் சில சமயம் சராமாரியாக கடுமையான வார்த்தைகளும் வந்து விடுவதுண்டு சிலரை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் சற்று தொலைவில் வரும்போதே அயோக்கியபய வர்றான் அவனை திரும்பி போகச் சொல்லு என்பார் 


சிலரை அருகில் அழைத்து வைத்துக் கொண்டு அன்பாகப் பேசுவார் கருணையோடு பார்ப்பார் சிலரிடம் போய்டடீ வாங்கிட்டு வா என்பார் சிலரிடம் எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியா என்று கேட்பார் 


வெகுசிலருக்கு அவரை தன்னை பழனிமுருகன் ஆகவே உருமாற்றி காண்பித்தது உண்டு 


இப்படி அவர் எந்த உத்தரவிட்டாலும் அவை மக்களின் கர்மவினைகளை விரட்டினர் காலப்போக்கில் தான் இந்த உண்மையை மக்கள் உணர்ந்தனர் அதன்பிறகு மூட்டைசாமிகளை நோக்கி தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் படையெடுத்தனர் அதன் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய விவரங்கள் வெளிஉலகுக்கு தெரிய வந்தன


பழனி கணக்கம்பட்டியில்தான் சுவாமிகள் பிறந்தார் அந்த ஊரைச் சேர்ந்த திம்மநாயக்கருக்கு இரு மனைவி மூத்த தாரத்தின் மகனாக பிறந்தவர் சாமிகள் காளிமுத்து என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது சிலர் அவரது பெயர் காளியப்பன் என்கிறார்கள் ஆனால் பழனியப்பன் என்பதுதான் இயற்பெயர் என்ற குறிப்பும் உள்ளது அதனால் தான் அவர் பெயர் பழனிசாமி என்று மாறியதாக சொல்கிறார்கள்

சித்தியின் பாரபட்சத்தால் படிப்பை பாதியில் விட வேண்டியதாயிற்று இதனால் பால்க்காரர் ஒருவர் வீட்டில் வேலைக்கு சேர்த்து விடபட்டார் ஒரு தடவை பால்காரர் எதிரிகளுடன் சண்டை போட்டதில் இவர் கடுமையாக தாக்கப்பட்டு பழனிமலை காட்டுக்குள் வீசப்பட்டார் அந்த காட்டுக்குள் மூன்று நாட்கள் சுய நினைவில்லாமல் கிடந்தார் 4வது நாள் சுவாமிகளை காட்டிலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர் உடனே சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டது 


ஒருநாள் முழுக்க உடல் அங்கே இருந்தது மறுநாள் உடல் மாயமாகி விட்டது அடுத்தநாள் இடும்பன் மலைக்குகை ஒன்றில் பழனிச்சாமி தியானத்தில் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் சவக்கிடங்கில் கிடந்தவருக்கு எப்படி உயிர் வந்தது எப்படி மலைகுகைக்கு  போனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை

இடும்பன் மலை காட்டுக்குள் கிடந்த 3 நாட்களில் அவரிடம் சித்த புருஷருக்கான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது இடும்பன் மலை சிவன் கோயில் உச்சினிமாகாளி அம்மன் கோயில் காந்தி மார்க்கெட் பகுதிகளில் அவர் மாறி மாறி அலைந்தார் 

முக்காலமும் உணர்ந்த ஞானியாக உலா வந்தார் பஞ்சபூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தார் பறவைகள் விலங்குகள் பேசுவது அவருக்குப் புரியும் ஆனால் எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை


அப்போது சாமிகளுக்கு சுமார் 45 இருக்கும் பழனி நகர தெருக்களில் சுற்றித் திரிந்தவர் மகத்தான மகான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மக்களுக்கு தெரியவந்தது சிறு துணி மூட்டையை இடது தோளில் சுமந்தபடி காணப்பட்டார் அது மக்களின் பாவம் தீர்க்கும் பாவ மூட்டையாக இருந்தது யாரையும் அந்த மூட்டையை தொட அனுமதித்தில்லை


எப்போதும் மூட்டையுடன் காணப்பட்டதால் அவரை மக்கள் மூட்டை சாமிகள் என்று அழைத்தனர் மக்களின் பாவங்கள் தோஷங்கள் கர்மவினைகளை தனக்குள் வாங்கிக்கொண்ட அந்த மகான் பழனியில் தன்னை நாடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் 1979ம் ஆண்டு தனது இருப்பிடத்தை கணக்கம்பட்டிக்கு மாற்றிக் கொண்டார் அங்கு யார் வீட்டுக்கு செல்லவில்லை

சாலையோரத்தில் நடந்தார் மரத்தடியில் உட்கார்ந்தார் சிறிது நாட்கள் கழித்து மோகன் என்பவரது தோட்டத்தில் அமர்ந்து ஆசி வழங்கத் தொடங்கினார் அதன் பிறகு சுமார் 35 ஆண்டுகள் அவரது அருள் ஆட்சி அங்கே நடந்தது

அப்போது அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் சுனாமி வந்ததையும் கல்பனா சாவ்லா பயணித்த ராக்கெட் வெடித்து சிதறும் என்பதை முன்கூட்டியே சொன்னார்


 பல்லாயிரக்கணக்கானவர்களின் கர்மாவை தன் பார்வையாலே போக்கினார் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒன்றா ரெண்டா பட்டியலிட்டால் 100க்கும்  மேல் புத்தகங்கள் எழுதலாம் என்றாலும் சிலவற்றை பார்க்கலாம் சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் வசித்துவரும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சித்தர் செம்மல் இரா. கற்பூரசுந்தர பாண்டியனின் மகன் ராஜசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்கள் சரவணன் கார்த்திக் மற்றும் இன்னொரு நண்பருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தார் 

விழா முடிந்ததும் நண்பர்கள் நால்வரும் கணக்கம்பட்டியில் உள்ள பழனி மூட்டைசாமியை சந்திக்கச் சென்றனர் அவர்களை பார்த்ததும் வாங்க சாமி அந்த கல்லை நகர்த்தி போடுங்க என்று உத்தரவிட்டார்


அது பெரிய பாறாங்கல் நண்பர்களும் அதை நகர்த்த போராடினார்கள் அப்போது மூட்டை சாமிகள் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டடே நீ வா சாமி இங்கே என்று சரவணனை அழைத்தார் அவரை மட்டும் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்


மற்ற மூன்று பேரும் கடுமையாக போராடி கல்லை சில அடி தூரம் நகர்த்தினர் அப்போது மூட்டை சாமி சரவணனிடம் சாமி எனக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறியா என கேட்டார்

உடனே சரவணன் காரில் பழனிக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்தார் சாமிகள் ரசம் மோர் இரண்டையும் எடுத்தார் தன்னிடமிருந்து ஒரு பாட்டிலில் அவற்றை ஊற்றி கலக்கி கொடுத்து குடி என்றார்


சரவணன் யோசித்தபடியே அதை வாங்கி குடித்தார் எப்படி இருக்குமோ என்று பயந்த அவருக்கு அந்த ரசம் மோர் கலவை தேவாமிர்தமாக இருந்தது சுவாமிகள் கைப்பட்டதால் அதன் சுவை மாறி இருந்ததை உணர்ந்து சிலிர்த்துப் போனார்


அந்த சமயத்தில் மற்ற மூன்று நண்பர்களும் பெரிய கல்லுடன் போராடியபடி இருந்தனர் அவர்களில் ஒருவர் எங்களை விட்டு விடுங்கள் என்று மனதுக்குள் நினைத்திருந்தார் அடுத்த நிமிடம் சுவாமிகள் சரி போதும் வாருங்கள் என்று அழைத்தார் 

ராஜசேகரையும் கார்த்தியையும் அந்த கல் மீது படுத்து விட்டு வர சொன்னார் அதன் பிறகு நண்பர்கள் நால்வரும் சென்னை திரும்பினார்கள் சுவாமிகள் அருளால் நண்பர்கள் நால்வரும் இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் சுவாமிகள் கையால் தீர்த்தம் பெற்று அருந்திய சரவணன் வேறு யாருமல்ல நடிகர் சூர்யா அவர் தம்பி கார்த்தியும் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார் ராஜசேகர் படத்தயாரிப்பாளராக இருக்கிறார் மற்றொரு நண்பர் கோவையில் பெரிய தொழில் அதிபராக உள்ளார் இந்த நான்கு பேரும் சேர்ந்து கல்லை புரட்டிப்போட்ட இடத்தில்தான் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல்களை கற்பூரசுந்தர பாண்டியன் தனது சித்தர்கள் கூறும் இரகசியங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளார்


போலீஸ் உதவி கமிஷனர் சுசீல்குமார் மனைவி சாரா பெற்ற அனுபவம் வித்தியாசமானது அவர் சொல்கிறார் மூட்டை சாமிகள் பற்றி 2002ஆம் ஆண்டு எங்களுக்கு தெரிய வந்தது எண் கணித ஜோதிடர் துரைமுருகன் எங்களை கணக்கம்பட்டி அழைத்துச் சென்றார் முதலில் மூட்டை சாமிகள் மீது எனக்கும் கணவருக்கும் நம்பிக்கை வரவில்லை

2004ஆம் ஆண்டு மீண்டும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது அப்போது ஒருவித வைப்ரேஷன் உணர முடிந்தது சாமிகள் ஒரு கம்பை வைத்து கொண்டு நின்றிருந்தார் தீர்க்கமாகப் பார்த்தார் நிறைய பேர் அங்குள்ள கல்லை தள்ளிக் கொண்டிருந்தனர் நாங்களும் அவர்களோடு சேர்ந்து தள்ளினோம் அன்றிரவு அவர் குடிசை முன்பு சுமார் 50 பேர் உட்கார்ந்து இருந்தனர் நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக போய் உட்கார்ந்தோம்


சிறிது நேரத்தில் சாமிகள் வந்தார் பச்சை பனியன் போட்டு இருக்கிற சாமி இங்க வாங்க என்று என் கணவரை அழைத்தார் கடப்பாறையை கொடுத்து பள்ளம் தோண்ட சொன்னார் அதன் பிறகு எனக்கும் கணவருக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது பதினைந்து நாளில் மீண்டும் நாங்கள் சென்றோம் பிறகு மாதாமாதம் கணக்கம்பட்டி சென்றோம் தீபாவளி புத்தாண்டு தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில் நாங்கள் சுவாமிகளுடன் இருப்போம்


சுவாமிகள் இருந்த வயல் பகுதியில் நிறைய பாம்புகள் உண்டு ஆனால் யாரையும் தீண்டியதில்லை சிலசமயம் சாமிகள் ஏதாவது ஒரு திசையில் கையை காட்டி போ போ என்பார் அப்போது நாம் திரும்பிப் பார்த்தால் அங்கு பாம்பு போய்க்கொண்டிருக்கும் 


சுவாமிகள் எப்போதும் பரிபாசையில் தான் பேசுவார் எல்லோருக்கும் புரியாது நமக்கு தேவை என்றால் நிச்சயம் புரியும் என் கணவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அங்கு யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு தடவை சாப்பிடும்போது அந்த போலீஸ்காரரை வரச்சொல் என்றார்

எங்களுக்கு இருந்த எல்லா பிரச்சினைகளும் சாமிகள் தீர்த்து வைத்துள்ளார் நாங்கள் இன்று புத்துணர்ச்சியோடு இருக்கிறோம் என்றால் அதற்கு மூட்டை சாமிகள் தான் காரணம் என்றார் போலீஸ் கமிஷனரான சுசில்குமார் மனைவி சாரா


பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கும்பகோணத்தில் வசிக்கும் கண்ணன் மூட்டை சாமிகளிடம் தான் பெற்ற அனுபவங்கள் பல அவற்றில் சிலவற்றை கூறினார் நான் பணிபுரிந்த அரசு கல்லூரி வாசலில் நீண்ட நாட்கள் மூட்டை சாமிகள் இருந்தார் ஒரு நாள் என்னிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கினார் பிறகு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார் நான் சாமி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன் உடனே சாமிகள் என்ன இருக்கு என்றார் என் மனைவி பூரி என்றார் சரி சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்

1 2 3 4 8 16 என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தார் முதலில் குருமா தீர்ந்தது என்றாலும் சாமிகள் பூரி சாப்பிடுவதை நிறுத்தவில்லை 30 பூரி தாண்டி 40 பூரி சாப்பிட்ட பிறகும் சாதாரணமாக சாப்பிட்டபடி இருந்தார்

மாவு தீரும் நிலை வந்தது எங்களுக்கு உதறல் எடுத்தது 47வது பூரியை சாப்பிட்டபோது என்னமா நிறுத்திக் கொள்ளலாமா என்றார் என் மனைவியும் சரிங்க சுவாமி என்று சொல்ல சாப்பாட்டை முடித்துக் கொண்டார் எதற்காக என் வீட்டில் 47 சாப்பிட்டார் என்று தெரியவில்லை


மற்றொரு நாள் நான் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன் எதிரே மூட்டை சாமிகள் வந்தார் என்னிடம் இரண்டு ரூபாயை கொடுத்து இங்கே ஒரு விநாயகர் கோவில் கட்டு என்றார் எனக்கு பிரமிப்பாக இருந்தது 

இரண்டு ரூபாயை வைத்து எப்படி கோயில் கட்ட முடியும் என்று கேட்டேன் அதற்கு மூட்டை சாமிகள் கொஞ்சம் பொறு பஞ்சு வியாபாரி ஒருவன் வருவான் அவனிடம் சொல் கோவில் கட்டி தருவார் என்றார்


சுவாமிகள் சொன்னபடியே அந்த பகுதிக்கு சொகுசு கார் ஒன்று வந்தது அதில் இருந்தவர் என்னிடம் ஏதோ ஒரு முகவரியை கேட்டார் நான் மூட்டை சாமி கூறியதை சொன்னேன் அந்த பணக்காரர் எந்த மறுப்பும் சொல்லவில்லை சுவாமிகள் என்னிடம் கொடுத்த 2 ரூபாயை வாங்கிக் கொண்டு கோயிலை கட்டி கொடுத்தார் 

ஒரு தடவை இரவு 11.30 மணிக்கு மூட்டை சாமிகள் என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்றார் கண்ணை மூடி திற என்றார் அப்படியே செய்தேன் என் எதிரே 18 சித்தர்களும் நின்றனர் அடுத்த வினாடி சைகை காட்டினார் 18 சித்தர்களும் மறைந்துவிட்டனர்

அந்த சித்தர்கள் பற்றி கேட்டபோது எல்லாம் ராமாயண காலத்து பசங்க என்று சாமிகள் சிரித்துக்கொண்டே சொன்னார் அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது


தன்னை நம்பியவர்களுக்கு அவர் நம்பிக்கையாளராக திகழ்கிறார் என்றார்


இப்படி எத்தனையோ பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்திய சாமிகள் வெளிமாநிலம் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் கனவில் சென்று அழைத்து வந்தது உண்டு மலேசியாவைச் சேர்ந்த லேகா என்ற டாக்டர் இந்த தலத்திற்கு வந்து தன் நோயை தீர்த்துச் சென்றார் காஷ்மீரை சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் திடீரென்று வந்து சுவாமிகள் தன் கனவில் வந்து அருள்பாலித்தார் என தெரிவித்தார்


முடக்குவாதத்தால் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபரை மதுரையிலிருந்து சாமிகளிடம் தூக்கி வந்திருந்தனர் அவரை கூர்மையாக பார்த்து விட்டு டீ வாங்கிட்டு வா என்று சொன்னதும் அந்த வாலிபர் எழுந்து நடக்கத் தொடங்கினார் இந்த அற்புதத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்


கணக்கம்பட்டி அருகிலுள்ள கோம்பைபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள் ஆனால் சுவாமிகள் நீ எங்கும் போகவேண்டாம் இந்த பாலைக் குடி என்றார் 

சாமிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை மறுநாள் அவர் போய் மருத்துமனைக்கு சென்றபோது இதயத்திலிருந்து ஓட்டை மாயமாக மறைந்துவிட்டது என்று டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்றார்கள் விசாரித்தபோது மூட்டை சாமிகளின் சிறப்பு தெரியவந்தது 


ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக படுத்தபடுக்கையாக தூக்கி வந்தனர் மூட்டை சாமிகள் அவருக்கு திருநீறு கலந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தார் அடுத்த மூன்று மாதங்களில் அந்த நபருக்கு புற்றுநோய் காணாமல் போனது புற்றுநோய் எங்கே போனது என்றே தெரியவில்லை

எல்லாம் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அற்புதங்கள் ஆகும்


 இவரின் ஜீவசமாதி ஆலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மோகன் இவரின் இத்தகைய அற்புதங்களை தெரிவித்தார் அவரது தோட்டத்தில் தான் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மூட்டை சாமிகள் நமக்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்

மோகனின் செல்போனுக்கு கோவிலில் இருந்த ஒருவர் பேசினார் தனது பெயர் குரு என்றும் நன்கொடை ரசீதில் உள்ள போன் நம்பரை பார்த்து தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார் உடனே மோகன் செல்போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டார் அந்த நபர் கோவையில் இருந்து பேசினார் அவர் கூறியதாவது மூட்டை சாமிகள் பற்றி நண்பர் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார் ஆனால் எப்படி ஒரு மனிதனை கும்பிடுவது என்று எனக்கு தயக்கமாக இருந்தது


 ஒரு நாள் கோவையிலிருந்து பழனிக்கு வந்த போது கண்டக்டரிடம் கணக்கம்பட்டியில் பஸ் நிற்குமா என்று கேட்டேன் அவர் நிற்காது என்றார் உடனே நான் மனதுக்குள் மூட்டை சாமி உண்மையிலேயே நீங்கள் சக்தி உள்ளவராக இருந்தால் கணக்கம்பட்டியில் இந்த பஸ் நிற்க வேண்டும் என மனதுக்குள் நினைத்தேன் நான் நினைத்தபடியே அந்த பஸ் கணக்கம்பட்டியில் நின்றது ஆச்சர்யத்தோடு இறங்கினேன் சாமியை பார்க்க சென்றேன் அப்போது அவர் என்னை பார்த்து என்ன வெங்காயத்துக்கு இங்கே வந்தாய் என்று திட்ட ஆரம்பித்தார் எனக்கு மிகவும் கவலையாகி விட்டது அங்கிருந்த ஒருவர் கவலைப்படாதீங்க நான் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறேன் சாமிகள் திட்டினால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்று சொல்லி சாமிகளின் படம் ஒன்றை என்னிடம் கொடுத்தார் அதை எனது சட்டைபையில் 

வைத்தேன் அன்றுமுதல் வாழ்வின் ஏகப்பட்ட நல்ல மாற்றமும் மறுமலர்ச்சியும் நடந்தது இப்போது சாமிகளுடன் மனதுக்குள் பேசிக் கொள்கிறேன் எனது குடும்பம் நல்ல நிலையில் உள்ளது என்றார் 


கணக்கம்பட்டி ஜீவசமாதி அதிசயம் வாய்ந்தது 

பொதுவாக சித்தர்கள் ஒருவரை தமது தலத்துக்கு அழைக்க விரும்பினால் ஒரு பக்தர் மூலம் அதை செயல்படுத்துவார்கள் என்பார்கள் நிமிடத்துக்கு நிமிடம் அற்புதங்கள் செய்த அந்த மகான் 11 3 2014 அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர் எனவே ஒவ்வொரு புனர்பூசம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் குருபூஜை அன்று கொண்டாடப்படும் தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறார்கள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆசி பெற தவறியர்கள் இன்று அவரது அருமையை உணர்ந்து ஐயோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள்


 இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை கணக்கம்பட்டியில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்தாலே போதும் சுவாமிகளின் அதிர்வலைகளை உணரமுடியும் நம்பிக்கையோடு அவரை வணங்கினால் நிச்சயம் நல்லதே செய்வார்


பழனி அருகில் கணக்கம்பட்டி உள்ளது பஸ்களிலும் ஆட்டோக்களிலும் போகலாம் ஜீவசமாதி வழிபாடு தொடர்பாக ஐயா மோகனிடம் பேசலாம் மூட்டைசாமிகளை பெரும்பாலானவர்கள் முருகனின் அம்சம் என்று சொல்கிறார்கள் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் சுந்தரபாண்டியன் தனது நூலில் பாம்பாட்டிசித்தரின் 16வது திவ்ய சரீரம் என்று குறிப்பிட்டுள்ளார் மோகன் ஐயா பல தடவை சுவாமிகளை முருகன் உருவத்தில் பார்த்திருப்பதாக  கூறினார் 


அதுபோல ஆன்மீக பிரபல எழுத்தாளர் சுவாமிநாதனும் மூட்டைசாமிகளை பழனி முருகன் கோலத்தில் பார்த்ததாக பதிவு செய்துள்ளார் சாமிகளின் தோட்டத்தில் இருக்கும் ஜோதி என்ற பெண்மணி கூறுகையில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகளின் மறு அவதாரமாக கணக்கம்பட்டிச் சுவாமிகள் திகழ்வதாக தெரிவித்தார் இப்படி மூட்டை சாமிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அம்சமாக காட்சி அளித்துள்ளார்


 ஸ்ரீ சாய் பாபாவுக்கும் மூட்டை சாமிகளுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கியது போல மூட்டை சாமிகளும் கல்லில் அமர்ந்து ஆசி வழங்கினார் பாபா அமர்ந்திருந்த கல் ஷீரடி துவாரகாமாயியில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது போல கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் அமர்ந்த கல்லும் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பாபாவுடன் எப்போதும் ஒரு நாய் காணப்படும் மூட்டை சாமிகள் உடன் மணி என்ற நாயும் இடம்பெற்றுள்ளது அந்த நாய் மூட்டை சாமி உடன் இருக்கும் அந்த நாய் மூட்டை சாமிகளின் ஜீவசமாதி அருகிலேயே படுத்திருக்கும் மூட்டைசாமிகளை நிறைய பேர் தங்களது கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் அவரிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுகிறார்கள் ராசிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் மூட்டைசாமிகளை தங்களது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் மூட்டை சாமியாரை சாய்பாபாவின் அவதாரமாகவே பார்க்கிறார்கள் 


சாய்பாபாவின் பரம பக்தனான எனக்கு கணக்கம்பட்டி வந்த பிறகே சித்தர்கள் தேடலில் மிகுந்த ஈடுபாட்டை எனக்கு நல்கினார்  அவரது ஜீவசமாதிக்கு நாங்கள் முதல்முறையாக சென்றபோது பெரும் அதிசயம் நிகழ்ந்தது புதிதாக எந்த ஜீவசமாதி சென்றாலும் அந்த நேரத்தில் வருணபகவான் ஆசீர்வாதம் செய்வது வழக்கம் அப்பொழுது அந்த இடத்தை மழை பெய்து குளிர்விப்பார் இந்த அதிசயம் அடிக்கடி எனக்கு நடப்பதுண்டு முதல்முறையாக கணக்கம்பட்டி சென்றபோது அப்படித்தான் மழை சோவென்று பெய்தது அந்த மழையில் நாங்கள் சென்ற கார்  வாகனங்கள் நிறைய நின்றதாலும் ஒரு வாகனம் பழுது ஏற்பட்டு நின்றதாலும் போக்குவரத்து நெரிசலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இரண்டு பக்கமும் நகர முடியாமல் மாட்டிக் கொண்டோம் கணக்கம்பட்டியில் இருந்து மூட்டை சாமியார் ஜீவசமாதி செல்லும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்றது நாங்கள் வெளியே இறங்க முடியவில்லை மழை வேறு பெய்து கொண்டிருந்தது அதே நேரத்தில் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை மூட்டை சாமிகள் இடத்தில் இருந்து பார்த்தால் (கணக்கம்பட்டி) பழனி மலை தெரியும் அந்தப் பழனிமலை முருகனை நோக்கி நாங்கள் வேண்டிக்கொண்டோம் 


கணக்கம்பட்டியாரை தரிசனம் செய்ய எவ்வளவு தடங்கல் ஏற்படுகிறது முருகா நீயே எங்களுக்கு வழி காட்டுவாயாக என்று மனதார உளமார வேண்டினோம் அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே மழை நின்றது நின்ற வண்டிகள் நகர தொடங்கின கணக்கம்பட்டியார் ஜீவசமாதியில் காலடி எடுத்து வைத்து முதல் முறையாகவே அங்கு நுழைந்தவுடனேயே பெரிய அதிர்வலைகள் ஜீவசமாதியில் நிரம்பி வழிந்தது சாய்பாபாவின் அருகில் இருக்கும் நாய் போலவே நிறைய நாய்கள் அங்கேயும் ஜீவசமாதியில் இருந்தன அது எங்களை நோக்கி அந்த ஜீவசமாதியின் வாயில் காப்பானே போல வந்து வரவேற்றது தெரிந்த நண்பனைப்போல உறவினை போல தெரிந்த நபரை போல எங்கள் பாதங்களை கைகளை நக்கியது அவரின் ஜீவசமாதியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம் செய்தோம் மூட்டைசாமியாரை மனதிலிருத்தி அவருடன் பேசினோம் கணக்கன்பட்டி மூட்டை சாமியார்  பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் அங்கிருந்த ஒருவர் வந்து மூட்டை சாமியார் பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்தார் மூட்டை சாமியாரின் வரலாறு பற்றி அவர்தான் எங்களுக்கு கூறினார் அடுத்த முறை அந்த ஜீவசமாதி சென்றபோது அங்கே அப்படி ஒரு நபரை நாங்கள் பார்க்கவே இல்லை பிறகுதான் கனவில் வந்து கணக்கம்பட்டியாரே தான்தான் வந்ததாக தெரிவித்தார் பிறகு வருடம் தவறாமல் கணக்கம்பட்டி செல்வதும் ஷீரடி ஸ்ரீசாய்பாபா செல்வதும் வழக்கமாக்கிக் கொண்டேன் கணக்கம்பட்டியார் நிறைய முறை கனவில் வந்து வழிகாட்டியது உண்டு அவரை நினைத்தாலே பிரச்சினைகளும் பறந்தோடிப் போகும் என்னைப்பொறுத்தவரை சித்தர்கள் நமக்கு நல்வழி காட்டுபவர்கள் சித்தர்களை மனதில் வைத்து கொண்டால் நமது கர்ம வினைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும் கணக்கம்பட்டியார் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் மறு அவதாரம் தான்தான் என்று நிறைய பேர் கணக்கம்பட்டியார் பெயரை சொல்லிக்கொண்டு போலி பித்தலாட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் ஜீவ சமாதி இன்றும் உயிர்ப்புடன் உள்ளது எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கணக்கம்பட்டியாரை உளமாற மனதார நினைத்தால் உடனே வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பவர் கணக்கம்பட்டி வெறும் மகான் அல்ல அவர் சித்த புருஷர் கணக்கம்பட்டியாரின் விபூதியை எடுத்து வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்திற்கு சென்றாலும் அந்த காரியத்தில் வெற்றி கிட்டும் கணக்கம்பட்டியாரின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் கணக்கம்பட்டியாரின் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாம் உங்கள் வேலை பார்க்கும் இடம் தொழில் செய்யும் இடத்தில் வைத்து வணங்கலாம் கணக்கம்பட்டியார் வெறும் மனிதர் மட்டுமல்ல அவர் ஒரு அவதார புருஷர் கணக்கம்பட்டியார்தான் நான் வணங்கும் குருமார்களில் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர் அவரை தரிசனம் செய்த அன்றிலிருந்தே என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது அவர் சூட்சும ரூபமாக என்னுடனேயே வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களை எல்லாம் நான் ஒருமுறை கணக்கம்பட்டி சென்று வாருங்கள் என்று சொல்வதுண்டு ஏனெனில் ஒரு தடவை சென்று விட்டால் நீங்கள் அவரை பிடித்து கொள்வீர்கள் அவர் உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடுவார் உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார் கணக்கம்ப்பட்டியாருக்கும் கல்லுக்கட்டி சித்தருக்கும் நிறைய தொடர்பு உண்டு. கணக்கம்பட்டி யார் சில நேரங்களில் தனது பக்தர்களை கல்லுக்கட்டி சித்தரிடம் அனுப்புவதுண்டு கல்லுகட்டி சித்தர் சிலநேரங்களில் தனது பக்தர்களை கணக்கம்பட்டியாரிடம் அனுப்புவதுண்டு இருவருமே சம்பாஷணையில் பேசிக் கொள்வார்கள் என்று அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று யாருக்கும் தெரியாது இத்தனைக்கும் இருவருமே சந்தித்து கொண்டதே கிடையாது கல்லுகட்டி சித்தர் ஆஞ்சநேயர் சொரூபம் கொண்டவர்.கணக்கம்பட்டியார் முருகப்பெருமான் அம்சம் சாய்பாபா அவதாரம் பாம்பாட்டி சித்தர் சுவாமிகள் அவதாரம்.எனக்கு நிறைய கடவுள் குறிப்பு தருபவர்கள் சித்தர்களே ஆவார்கள் அதில் சாய்பாபாவும் கணக்கம்பட்டியாரும் முதன்மையானவர்கள்.

கணக்கம்பட்டி சென்று வரும் பொழுதெல்லாம் எனக்கு நல்ல திருப்பம் நடப்பது வழக்கம்.ஒரு முறை கணக்கம்பட்டியாரை சென்று தரிசனம் செய்து வாருங்கள் உங்களுக்கே தெரியும் புரியும் நல்லதே நடக்கும்.எனக்கு கணக்கம்பட்டியார் பற்றி தர்மராஜன் அண்ணன்தான் வழிகாட்டினார் நான் கணக்கம்பட்டியாரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை ஆனாலும் சூட்சும ரூபத்தில் கணக்கம்பட்டியார் எனக்கு காட்சி தருவது வழக்கம் அவர்தான் என் உள்ளுணர்வு அவர்தான் என் மனம் முருகன் அருள்

#நற்பவி 

#கணக்கம்பட்டிபழனிசாமி 

#குருவேசரணம் 

#சற்குருவேசரணம் 

#தீபம் 

#ஶ்ரீசச்சிதானந்த


Thanks for spending your valuable time here. Keep in touch, keep following & keep supporting us.


Thanks & Regards,


Devarajan NR,
Chairman – JBEGlobal.com Job Portal & IATFTrainingPortal.com (Since 2013) Past – Delphi TVS | Rane | Brakes India | Iris Mfg. (Shriram Group) | Hinduja Foundries | IRS (IRQS) | 9362439124 | devarajan.jupiter@gmail.com