இதை எழுதும்போதே "உடலெல்லாம் சிலிர்க்கிறது"...
பல வருடங்களாக செஸ் சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நம் இந்தியாவை GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நம் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து நம் இந்தியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நார்வே நாட்டைச் சேர்ந்த "மேக்னஸ் கார்ல்சன்". பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர்.!
இவ்வளவு பெரிய GRAND MASTER, மறுபடியும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் தமிழக மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு ஏன் "மேக்னஸ் கார்ல்சன்" கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத்திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா. இவனது இந்த வெற்றி உலக நாடுகளிடம் இந்தியாவின் ஆதிக்க கொடி மறுபடியும் பறக்க காரணமாகிறது...
சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத்தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது ஒன்றும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.". ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா. இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை நான் அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!
சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.! தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் "வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே" என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் "வல்" என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் "கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய" என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் "வல்லுப் பலகை" என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!
SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்து என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியமாக நம் தமிழ் மண்ணில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!
சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய "வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. "வல்லு" என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த வல்லு விளையாட்டுதான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக "பாரதமே" முன் நிற்கிறது.
உலகமே உற்றுநோக்கும் விதமாக 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்நன்னாளில் உலகம் போற்றும் இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது "பாரதவாசிகளாகிய" நாம்தான் என்பதில் பெருமைகொள்வோம்.!
Thanks for spending your valuable time here. Keep in touch, keep following & keep supporting us.
Thanks & Regards,
Devarajan NR,
Chairman – JBEGlobal.com Job Portal & IATFTrainingPortal.com (Since 2013) Past – Delphi TVS | Rane | Brakes India | Iris Mfg. (Shriram Group) | Hinduja Foundries | IRS (IRQS) | 9362439124 | devarajan.jupiter@gmail.com